search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்பு"

    • ஐ.சி.டி. அகாடமி வாயிலாக 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு சூழலியலுக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு
    • பயிற்சியின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட படித்த- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில், சுங்கான் கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் தொடக்க விழா கலெக்டர்அரவிந்த் தலைமையில் நடந்தது. மேயர்மகேஷ் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டும். ஏற்றத்தாழ்வு களுக்கு இடம் கொடுக்காமலும், ஐ.சி.டி. அகாடமி வாயிலாக 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு சூழலி யலுக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு தொடர்பான பல்வேறு திறன் திட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியின் நோக்கமே இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வாதாரம், பொருளா தாரத்தில் முன்னேற் றம் அடைய செய்வதேயாகும்.

    மேலும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து முதலீட்டை கொண்டு வந்து, பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய சூழலில் தொழில்நுட்பம் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. மாணவ, மாணவியர்கள் அதற்கேற்றவாறு தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வேலையானது அதிக வருவாய் தரும் வேலையாகும் .நிறுவனங்களின் திறன் தேவைக்கும் பணியாளர்களின் உண்மையான திறமைக்குமான இடை வெளியைக் குறைக்க . தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யுடன் இணைந்து தமிழ்நாடு ஐ.சி.டி. அகாடமி, இளைஞர் வேலைவாய்ப்பு திறன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயிற்சியினை மாணவர்கள் மிகுந்த ஈடுபாட் டுடனும் , ஆர்வத்துடனும் கற்றுக்கொள்ள வேண்டும்.

    பயிற்சியின் வாயிலாக கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட படித்த- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுவார்கள். சூழ்நிலைகளை பாதிக்காத வகையில் வேலைநாடுநர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் . பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு , தகுதியான வேலை வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்கங்கள் வசதி செய்து தரப்படும். படித்த இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடை ய வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ( தேசிய நெடுஞ்சாலை ) ரேவதி, தலைமை செயல் அதிகாரி ஹரி பால சந்திரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா, இம்மானுவேல், புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வர்மகேஸ்வரன் , பொது மேலாளர் ( ஐ.சி.டி அகாடமி) ஸ்ரீகாந்த், பூர்ண பிரகாஷ், சரவணன், ரெமோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 12-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12 - ந் தேதி மற்றும் 26 - ந் தேதி ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    இதில் பல்வேறு தனியார் துறை நிறுவ னங்கள் , ஐ.டி. நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10, 12- ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ , ஐடிஐ , செவிலியர் , மருந்தாளுநர் படித்தவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

    • புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
    • தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் எஸ்டிபி தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.‌

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. திருச்சி தொன்போஸ்கோ வழிகாட்டி நிறுவனமும், தக்கலை இளையோர் கல்வி சேவை மையமும், புனித அல்போன்சா கல்லூரியும் இணைந்து இந்த முகாமை நடத்தின.

    ஆயிரத்திற்கும் அதிக மானோர் கலந்து கொண்டனர். பி.பி.ஓ., டெய்லரிங், சாப்ட்வேர், டேட்டா என்ட்ரி, ஆட்டோ மொபைல், பேங்கிங் செக்டார், பார்மசி, கோர் ரிலேட்டேட், மெடிக்கல் கோடிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் 300 க்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பைப் பெற்றனர்.

    அவர்கள் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், விருதுநகர், கன்னியாகுமரி முதலிய நகரங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் கலந்து கொண்ட வர்களுக்கும், வேலை வாய்ப்பைப் பெற்ற வர்களுக்கும் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், கல்லூரி கல்வி இயக்குனர் அருட்தந்தை மைக்கேல் ஆரோக்கியசாமி, முதல்வர் இசையாஸ், துணை முதல்வர் சிவனேசன், தக்கலை இளையோர் சங்க இயக்குனர் அருட்தந்தை சந்தோஷ்குமார், அருட் தந்தை ஜோஷி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.அத்துடன் பலரும் பயன் பெறும் வண்ணம் இத்தகைய சிறப்பு மிக்க வேலை வாய்ப்பு முகாமை நடத்திய கல்லூரிக்கும், தக்கலை இளையோர் சேவை மையத்திற்கும், திருச்சி தொன்போஸ்கோ வழிகாட்டி மையத்திற்கும், கலந்து கொண்ட வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கும், வேலை வாய்ப்பைப் பெற்றுப் பயனடைந்த பயனாளர்களுக்கும் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் எஸ்டிபி தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.‌

    • முதல்கட்ட முகாமில் திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 16 பின்னலாடை நிறுவனங்கள் தேர்வு நடத்தின.
    • 210 மாணவர்களுக்கு பணியில் இணைவதற்கான கடிதம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் துவக்கிவைத்தனர்.முதல்கட்ட முகாமில் திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 16 பின்னலாடை நிறுவனங்கள் தேர்வு நடத்தின. இதில், 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில், தேர்வு செய்யப்பட்ட 210 மாணவர்களுக்கு பணியில் இணைவதற்கான கடிதம் வழங்கப்பட்டது.

    இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட முகாமில் 15 பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தேர்வு செய்தன. இதில் பங்கேற்ற 230 மாணவர்களில் 160 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம் மூலம் மொத்தம் 370 மாணவர்களுக்கு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. நிப்ட்-டீ கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைவர் சத்திய நாராயணன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர்கள் வைரமுத்து, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    மதுரை

    மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அரசனூரில் உள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா வரவேற்றார். 

    பி.எஸ்.ஒய். கல்வி குழும நிறுவனர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் 

    மதுசூதன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார். தொடர்ந்து 2021-2022

    கல்வியாண்டில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் நடந்த வேலைவாய்ப்பு போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 100 -க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் வைரமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பழனிசாமி, முருகன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர்கள் வைரமுத்து, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும்.

    காங்கயம்:

    காங்கயம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தான கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி வீரராக வராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் தொழிலாளர் நலத்துறை சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 43 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், பல்லடம் வட்டம் மின்வாரியத் துறை சார்பில் 5 பேருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து முதல் நிலை கூட்டம் நடைபெற்றது.

    அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க இந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு வேலைவாய்ப்பு முகாமிலும் 72 ஆயிரம் பேர் கலந்து கொண்டு 8,782 பேர் வேலை வாய்ப்பை பெற்றனர். இதுவரையில் தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு 85 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அனைத்து துறைகளும் ஆயத்தப் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும். அந்த வகையில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆணையர் எஸ்.பொன்னுசாமி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஏ.ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 10, 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
    • தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    ராணிப்பேட்டை:

    தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    அதனடிப்படையில் இந்த மாதத்தில் வருகிற 10-ந் தேதி, 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளனர்.

    ×